நடிகர் அக்‌ஷய் குமார் தாயார் காலமானார்

பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மும்பையில் இன்று கால மானார். பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர், தமிழில், ஷங்கர் இயக்கத்தில்…

பிரபல நடிகர் அக்‌ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மும்பையில் இன்று கால மானார்.

பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் இவர்,
தமிழில், ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த
பெல்பாட்டம் படம் கடந்த மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தனது அடுத்தப் படமான ’சின்ட்ரெல்லா’வின் ஷூட்டிங் லண்டனில் நடந்து
வந்தது. இதற்காக அங்கு சென்றிருந்த அக்‌ஷய்குமார், திங்கட்கிழமை திடீரென மும்பை
திரும்பினார். அவர் அம்மா, அருணா பாட்டியாவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருந்த தை அடுத்து அவர் அவசரமாக மும்பை திரும்பினார்.

தனது தாய்க்காக பிரார்த்திக்குமாறு ரசிகர்களிடம் சமூக வலைதளத்தில் அவர் கேட்டுக்
கொண்டிருந்தார். இதற்கிடையே இன்று காலை, அருணா பாட்டியா உயிரிழந்தார். கடந்த சில
நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த அவர், மும்பையில் உள்ள தனியார்
மருத்துவமனை ஒன்றில், சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்றி இன்று
உயிரிழந்துள்ளார்.

இதை ட்விட்ட்ரில் தெரிவித்துள்ள அக்‌ஷய்குமார், ’எனக்கு அனைத்துமாக இருந்தவர் என்
அம்மா. அவர் மறைவால் தாங்கமுடியாத வேதனையை உணர்கிறேன். என் தாய் இன்று இந்த உலகில் இருந்து விலகி, வேறு உலகில் என் தந்தையுடன் இணைந்துள்ளார். இந்தச் சூழலில் உங்களின் பிரார்த்தனைகளை மதிக்கிறோம். ஓம் சாந்தி’ என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.