இந்தோனேஷியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 41 கைதிகள் உயிரிழந் துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவுக்கு அருகில் உள்ளது தங்கெராங் (Tangerang) சிறைச் சாலை. இங்கு போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப் படும் குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதிகக் கைதிகளை கொண்ட சிறைச்சாலை யான இங்கு, இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தும் இந்த விபத்தில் 41 கைதிகள் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 70 பேர் லேசான காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தீவிபத்து ஏற்பட்டபோது கைதிகள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.








