“இனிமேல் கோவையில் தான் இசை வெளியீட்டு விழா”: அடம்பிடித்த ரோபோ சங்கர்!

சென்னையில் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்றும், கோவையில் வைங்க என நடிகர் ரோபோ சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.  கோவை ராம்நகர் தனியார் விடுதியில் இன்வான் ப்ரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரசீத் இயக்கத்தில் நடிகைகள்…

சென்னையில் இசை வெளியீட்டு விழா வேண்டாம் என்றும், கோவையில் வைங்க என நடிகர் ரோபோ சங்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

கோவை ராம்நகர் தனியார் விடுதியில் இன்வான் ப்ரொடக்ஸன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரசீத் இயக்கத்தில் நடிகைகள் நேகா தேஷ் பாண்டே, பெஃரா, மீலு ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “அழகான ராட்ஸிகள்” திரைப்பட்டதின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரோபோ சங்கர் அவரது மனைவி, மகள் இந்திரா மற்றும் திரைப்படக் குழுவினர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கோவை மாநகர மத்திய உதவி காவல் ஆணையர் சேகர்
இசைத்தட்டை வெளியிட நடிகர் ரோபோ சங்கர் பெற்றுகொண்டார். நிகழ்ச்சியில்
பேசிய தயாரிப்பாளர் இலியாஸ், இந்தபடத்தின் இசை வெளியீடு இவ்வளவு வேகமாக நடப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், வேகமாக எடுக்கப்பட்ட படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய நடிகை நீலு,அடுத்த படமும் தமிழில் நடிக்க வேண்டும் என்றும், தனது தாயார் விரும்புவதை போல் பெரிய இடத்திற்கு செல்வேன் என கூறினார்.

பின்னர் நடிகர் ரோபோ சங்கர் பேசினார். அப்போது அப்துல்கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தில் இசை வெளியீடு விழா நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த காலத்தில் படத்தை எடுத்து முடித்த இயக்குநருக்கு நன்றி. அடுத்த படத்திற்கு சார்ஜாவிற்கு அழைத்துச் செல்வதாக தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். அதற்கு நான்கு
டிக்கெட் போட வேண்டும்.

இந்த நிகழ்ச்சி இசை வெளியீடு மாதிரி இல்லாமல் ஒரு கார்பரேட் ஷோ மாதிரி இருக்கிறது. இசை வெளியீட்டு விழா சென்னையில் வைக்காதீங்க, கோவையில் வையுங்கள் என கோயம்புத்தூர் தமிழில் வேண்டுகோள் விடுத்தார். தகிட தகிட டான்ஸ்
ஆடுமாறு ரசிகர் கேட்க அதற்கு அந்த மாதிரி,அந்த பாட்டுக்கு அப்படி ஆடக்கூடாது
என நகைச்சுவையாக கூறினார். நகைச்சுவை கதாபாத்திரங்களில்
நடித்து வருகிறீர்கள் எப்போது ஹீரோவாக நடிக்க போகிறீர்கள் என்ற தொகுப்பாளரின்
கேள்விக்கு எப்பவும் மக்கள் மனதில் ஹீரோதான் என பதிலளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.