#AK63 | ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் அஜித்குமார் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் ஸ்பெயினில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன. அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ்…

#AK63 | Ajith Kumar on the set of 'Good Bad Ugly' - photos that are stirring the internet!

நடிகர் அஜித் ஸ்பெயினில் இருக்கும் புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றன.

அஜித்தின் 63-வது திரைப்படமான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 2025-ம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஹைதராபாத்தில் படப்பிடிப்பு 90% முடிவடைந்துள்ளது. அடுத்ததாக படக்குழு, 2ம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. அதன்படி ரஷ்யாவில் படப்பிடிப்புவிரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துடன் நடித்திருக்கும் த்ரிஷா, அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் ‘குட் பேட் அக்லி’ என்ற திரைப்படத்திலும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாகவும், அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும்போது அஜித்துடன் த்ரிஷாவும் இணைந்து நடிக்க இருப்பதாகவும் படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், குட் பேட் அக்லி படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கு அஜித் குமாருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. கைகளில் டாட்டூவுடன் இருக்கும் அஜித்தின் புதிய புகைப்படம் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. இந்தத் தோற்றம் அஜித் ரசிகர்களைக் கவர்ந்ததுடன் குட் பேட் அக்லியின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.