முக்கியச் செய்திகள் விளையாட்டு

ரஹானேவுக்கு பிறந்த நாள்: அவருடைய சாதனைகள் ஒரு பார்வை

இந்திய அணியின் துணை கேப்டனான அஜிங்க்ய ரஹானே அவரது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். மகாராஷ்டிராவின், அகமத்நகரில் ஜீன் 6ஆம் தேதி 1988 ஆம் ஆண்டு பிறந்தார் ரஹானே.

தற்போது அவருக்கு 33 வயது.அசத்தலான வலது கை பேட்ஸ்மேனான ரஹானே பல சாதனைகளை செய்துள்ளார். முக்கியமான போட்டிகளில், நிதானமாக விளையாடி ரஹானே இந்தியாவை காப்பாற்றியுள்ளார்.

மெல்போர்னில் ஆஸ்டிரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்டிரேலிய அணி 530 ரன்கள் எடுத்து முன்னணியில் இருந்தது. அப்போது களமிறங்கிய ரஹானே, விராட் கோலியுடன் இணைந்து 171 பந்துகளில் 147 ரன்கள் எடுத்தார். அதுபோல் 2014-15 இலங்கைக்கு எதிரான சீரிஸ்களில் இந்திய அணி 87 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது, சளைக்காமல் ரஹானே எடுத்த 126 ரன்கள், இந்தியாவை 413 ரன்கள் என்ற இலக்கை அடையவைத்தது. கடந்த 2015இல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா சரியாக விளையாடவில்லை. அப்போது ரஹானே ஜடேஜா மற்றும் அஸ்வினுடன் இணைந்து 334 ரன்கள் எடுத்தார். ரஹானே தனியாக 127 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் வெற்றிகளில் ரஹானேவுக்கும் பங்கிருக்கிறது என்றால் மிகையல்ல.

Advertisement:

Related posts

அதிமுக – திமுக நேரடியாக எத்தனை இடங்களில் மோதுகின்றன!

Ezhilarasan

இந்தியாவில் மீண்டும் பப்ஜி வெளியாவதில் சிக்கல்?

Dhamotharan

பொது முடக்கம் வதந்திகளை நம்ப வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan