ஏ 350 விமானங்களை இணைக்க ஏர் இந்தியா முடிவு!

நடப்பு ஆண்டில் 2 ஏ 350 விமானங்களை சேவையில் இணைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. டாடா குழுமத்தால் செயல்படுத்தப்பட்டும் வரும ஏர் இந்தியா தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

நடப்பு ஆண்டில் 2 ஏ 350 விமானங்களை சேவையில் இணைக்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.

டாடா குழுமத்தால் செயல்படுத்தப்பட்டும் வரும ஏர் இந்தியா தனது சேவையை விரிவுப்படுத்தி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 470 விமானங்களுக்கு ஆர்டர் செய்துள்ளது. இதில் இரண்டு ஏ 350 விமானங்களைச் சேர்ப்பதற்கான சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடமிருந்து (டி.ஜி.சி.ஏ) ஒப்புதல் கடிதம் ஏர் இந்தியா பெற்றுள்ளது.

இந்த இரண்டு விமானங்களும் ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படும். அதே வேளையில், அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள், ஏர் இந்தியா-விடம் மொத்தம் ஆறு ஏ350 விமானங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 2024 க்குள் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் நவீன இருக்கைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டிருக்கும் என ஏர் இந்தியா தலைவர் காம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.