சென்னை தியாகராய நகரில் ஆகாய நடைபாதை இன்று திறப்பு : இதன் சிறப்பங்சங்கள் என்ன..?

சென்னை தியாகராய நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை இன்று திறக்கப்படுகிறது. இதன் சிறப்பங்சங்களை விரிவாக பார்க்கலாம். சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை ஆகாய நடைபாதை…

சென்னை தியாகராய நகரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதை இன்று திறக்கப்படுகிறது. இதன் சிறப்பங்சங்களை விரிவாக பார்க்கலாம்.

சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை ஆகாய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாகவே தியாகராய நகர் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கிறது. குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லக்கூடிய பகுதியாக தியாகராய நகர் பகுதி இருக்கும்.

அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் இந்த பகுதியில் கூடுவதால் எப்போதும்
போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்படுவதோடு அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

பொதுமக்கள் வசதிக்காக தற்போது சென்னை மாநகராட்சி சார்பில் சென்னை தியாகராய நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாம்பழம் மின்சார ரயில் நிறுத்தம் வரை உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த பாதை 30 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் 600 மீட்டர் தொலைவில் 4 மீட்டர் அகலத்தில் இரும்பு தூண்களால் ஆன உயர்மட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

டி நகர் பேருந்து நிலையம் முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை நடந்து
செல்பவர்கள் நெரிசல் மிகுந்த காய்கறி சந்தை பகுதியை கடந்து செல்ல வேண்டிய
சூழல் உள்ளது. இந்த பாலம் பயன்பாட்டுக்கு வந்தால் நடந்து செல்லக்கூடிய
பொதுமக்கள் சுலபமாக விரைவில் கடந்து செல்ல முடியும். வாகன ஓட்டிகளும் கூட்ட நெரிசலில் சிக்காமல் பயணிக்க முடியும்.

இந்த ஆகாய நடைபாதை பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக உறுதியான இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மழை மற்றும் வெயில் தாக்காத வண்ணம் உறுதியான மேற்கூரைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நடைபாதை படிகள், சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன , கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி
பொதுமக்களுக்கு உதவும் வகையில் கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.