கோவை குடியிருப்பு பகுதியில் அரிய வகை உயிரினமான எரும்புத்திண்ணியை இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை
அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கோவை சேரன் நகர் பகுதியில் உள்ள காலி இடத்தில் அரிய வகை உயிரினமான
எறும்புத்திண்ணி தென்பட்டுள்ளது. அதனை பார்த்த பொதுமக்கள், வன உயிர் மற்றும்
இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினரை அழைத்து தெரிவித்தனர்.
உடனடியாக சென்ற அந்த அமைப்பினர் அந்த எரும்புத்திண்ணியை மீட்டனர். மீட்கப்பட்ட எரும்புத்திண்ணி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அது பத்திரமாக வன பகுதியில் விடப்பட்டது. இது போன்ற அரிய உயிரினங்களை பாதுகாப்பது அவசியம் என்று உயிரியல் ஆர்வலர்கள் கூறிகின்றனர். அரிய உயிரினங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணவு ஏற்படுத்த வேண்டும் என இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.







