அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இன்று மக்கள் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரை சந்தித்தார். அப்போது குதிரை பேரத்தை ஊக்குவிக்கும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றை ஆளுநரிடம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஆளநர் மாளைகையில் செய்தியாளர்களை சந்தித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “அ.தி.மு.க.வில் இருந்து 15 பேர் வருவார்கள் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியது குதிரை பேரத்தை ஊக்குவிக்கிறது. அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேசி வருவது தொடர்பாக ஆலுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசு செயற்கையான மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஊழல் நடக்க வாய்ப்பிருப்பதாக ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று, ராஜினாமா செய்த 6 எம்.எல்.ஏ.க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்தவர்கள் மீது கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது” என்று அவர் கூறினார்.




