31.7 C
Chennai
September 23, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும்- ஜெயகுமார்

திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். 

சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நமது அம்மா ஆசிரியராக இருந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால் தான் மருது அழகுராஜ் வெளியேற்றப்பட்டார். தற்போது ஓ.பன்னீர்செல்வத்திடம் கூலிக்கு மாரடிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார். மருது அழகுராஜ் சமத்துவ மக்கள் கட்சி, வாழைப்பாடி ராமமூர்த்தி கட்சி, தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு சென்றவர் என்று கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், நமது எம்.ஜி.ஆரிலும் முறைகேடு, கையாடலில் ஈடுபட்டார். நமது அம்மா பத்திரிகையின் விளம்பர பணங்களை கையாடல் செய்துள்ளார். நமது அம்மா நாளிதழில் விளம்பரம் ஒரு பக்கத்திற்கு ரூ.60 ஆயிரம் ஆகும். அதை கையாடால் செய்துள்ளார். இப்போது ஓ.ன்னீர்செல்வத்துடன் இணைந்து தற்போது பொதுக்குழுவை பற்றி பேசி வருகிறார். பொதுக்குழு உறுப்பினர்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரின் பேச்சு அதிமுகவினர் அனைவரும் கொதித்து எழும் நிலையை உருவாக்கியுள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. முதலமைச்சராக எடப்பாடி பொறுப்பெற்ற இரண்டு மாதத்தில் கொடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தார். ஆனால் குற்றவாளிகளை ஜாமீனில் எடுத்தது திமுக தான். குற்றவாளிகளுக்கு ஆதரவாக வக்கீல் குழுவை அனுப்பியது திமுக என்று குற்றம்சாடினார்.

மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் திமுக எதிர்ப்புக் கொள்கையை வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் திமுக அரசை பாராட்டுவதை அதிமுக தொண்டன் எப்படி ஏற்றுக் கொள்வான்? தனி மரமாக ஓ.பி.எஸ் நிற்கிறார். நாங்கள் தோப்பாக நிற்கிறோம்.திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும். நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அதைப்பற்றி விரிவாக பேச முடியாது. அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக திமுக பொய் வழக்கு போடுகிறது. எந்த வழக்கு போட்டாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

சில்லறை வணிகத்தை அந்நியர்கள் கைப்பற்ற விட கூடாது – தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையில் ஆலோசனை

Web Editor

சூடுபிடிக்கிறது திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல்

Web Editor

தண்ணீர் என நினைத்து அமிலத்தை குடித்த மூதாட்டி உயிரிழப்பு!

Gayathri Venkatesan