முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

பாஜகவுடன் கூட்டணி வைக்காததால் தான் அதிமுகவுக்கு தோல்வி – மதுரை ஆதீனம்!

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

மதுரையில் மதுரை 293 ஆவது ஆதீனமான ஹரிஹர தேசிக பரமாச்சாரியர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

“இந்தியாவின் 3 ஆம் முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடிக்கும்,
அமைச்சர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்களே கொன்று குவிக்க காரணமானவர்களும் வெற்றி பெற்று விட்டார்களே என மன வருத்தம் உள்ளது.  இந்த காரணத்திற்காகவே காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆள முடியவில்லை,  வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.  இந்திரா காந்தி தாரை வார்த்து கொடுத்த கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும். கச்சத்தீவு  மீட்டெடுத்தால் தமிழகத்தின் மீன்வளம் அதிகரிக்கும். ஆகவே கச்சத்தீவு மீட்டு தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களே பாதுகாக்க பிரதமர் மோடி தமிழ் ஈழத்தை ஏற்படுத்த வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்.

கச்சத்தீவு மீட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.  60 ஆண்டுகளாக கச்சத்தீவு விவகாரம் குறித்து யாரும் பேசவில்லை.  பாஜகவின் கூட்டணி ஆட்சி சரியாக வரும்.  தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் மக்கள் முறையாக வாக்களித்து
அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள்.  மக்களின் முடிவு சரியானதாக உள்ளது.  இருந்த
போதிலும் இலங்கை தமிழர்களை கொன்று குவித்தவர்களுக்காக வாக்கு அளித்து
இருக்கிறார்களே அதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது.  இலங்கை தமிழர்கள் விவகாரம்
மற்றும் கச்சத்தீவு விவகாரம் என இரண்டிற்காக நான் பிரதமர் மோடியை
ஆதரிக்கிறேன்.

பிரதமர் மோடி எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்.  பாஜக குறைந்த தொகுதிகளில்
வெற்றி பெற்றதால் அக்கட்சியை தோல்வி அடைந்த கட்சி என விமர்சனம் செய்கிறார்கள்.
பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இருந்தால் பட்டனை அமுக்கியவுடன்
தாமரைக்கு ஓட்டு விழுகிறது என கூறியிருப்பார்கள்.  ஜனநாயக நாட்டில் தோல்வி
வெற்றி என்பது மக்கள் கொடுக்கக்கூடிய தீர்ப்பாகும்.

60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்களே 90 தொகுதிகளில் தான் வெற்றி பெற முடிந்தது.
காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை முறை ஆட்சி கலைக்கப்பட்டது.  ஆனால் பாஜக ஆட்சி புரிந்த காலகட்டத்தில் யாருடைய ஆட்சிகளையும் கலைக்கவில்லை. இலங்கை  தமிழர்களுக்காக தனி நாடு அமைக்க வேண்டுமென விரைவில் பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை விடுக்க உள்ளேன். பிரதமர் மோடி சிவபெருமான் மீது பக்தியாக  இருக்கிறார். தியானம் செய்கிறார், விபூதி பூசி கொள்கிறார். காசி விசுவநாதர்
கோவிலை மீட்டெடுத்தார்.

பிரதமர் எல்லா நாடுகளுக்கும் செல்கிறார் எல்லா மதங்களையும் ஆதரிக்கிறார்.  ஆகவே அவரை நான் ஆதரிக்கிறேன்,  பாஜகவிற்காக நான் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டதில்லை.  நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் அதிமுக தோல்வி தழுவியுள்ளது.  அதிமுக கட்டமைப்புகளை மேம்படுத்தவில்லை.  இந்த தேர்தலில் பாஜக,  நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகள் தமிழகத்தில் நல்ல கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளது.  இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் நான் ஆதரவு கொடுப்பேன்.  இலங்கைக்கு நான் நேரில் சென்றால் என்னை சுட்டு விடுவார்கள்.  இலங்கையில் தமிழர்கள் இருந்தாலும் சிங்கள வெறியர்கள் அங்கே தான் இருக்கிறார்கள்” என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

8 இந்தியர்களின் மரண தண்டனை – மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார் நீதிமன்றம்..!

Web Editor

வெள்ளத்தில் 3 நாட்களாக சிக்கித் தவித்த 2 நிறைமாத கர்ப்பிணிகள் மீட்பு!

Web Editor

இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை: 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading