அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் வரும் ஜூலை 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழகம், எம்.ஜி.ஆர். மாளிகையில் வருகின்ற 5.7.2023 புதன் கிழமை காலை 9 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள், பாஜக உடனான கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.