முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக 2ஆம் நாளாக ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, அதிமுக – தேமுதிக மூத்த நிர்வாகிகள் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற இருந்த நிலையில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில் தேமுதிக முக்கிய நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மக்களின் வரி பணத்தை அதிமுக அரசு வீணடித்துள்ளது: திராவிடன் அறக்கட்டளை

Halley karthi

பகைவனுக்கு அருள்வாய் – டீசர் வெளியீடு

Halley karthi

இணக்கமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது: கே.எஸ்.அழகிரி

Niruban Chakkaaravarthi