வார விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டம குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது குற்றாலம். இங்கு பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் புலியருவி சிற்றருவி உள்ளிட்ட அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் குளிப்பதற்காக நாடெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
குறிப்பாக ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் சீசன் காலமாகும். இந்த ஆண்டு மழை சரியாக இல்லாததால் சீசன் களைகட்டவில்லை. இதனால் வியாபாரிகளும் மற்றும் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மழையில் மழை பெய்து வருகிறது. குற்றாலத்திலும் சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர் அர்பரித்து கொட்டுகிறது.
வார விடுமுறையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாபயணிகள் குற்றாலத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் திரண்ட பொதுமக்கள் நீராடி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.







