முக்கியச் செய்திகள் உலகம்

ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்பு

ஹைதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஹைதியில் கடந்த 14ஆம் தேதி காலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.2 ஆகப் பதிவானது. ஹைதியின் மேற்கு பகுதிகளை இந்த நிலநடுக்கம் கடுமையாக தாக்கியது. தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் இருந்து 125 கி.மீட்டர் தொலைவில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் வீடுகள், கடைகள், ஓட்டல்கள், தேவாலயங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை கள், அரசு அலுவலகங்கள் இடிந்து விழுந்தன. இதனால் ஏராளமானோர் கட்டட இடிபாடு களில் சிக்கினர். நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் கடும் மழையும் பெய்ததால், இடிபாடுகளுக் குள் சிக்கியவர்களை மீட்கும் பணி பாதித்தது.

இந்த நில நடுக்கத்தில் முதல்கட்டமாக 724 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. இடிபாடுகளுக் குள் சிக்கியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் இதுவரை 1,941 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9,900 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

60 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தரைமட்டமானதாகவும் 76 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Advertisement:
SHARE

Related posts

சாதனாவிற்கு உதவித் தொகை வழங்கிய அமைச்சர் ராஜகண்ணப்பன்

Gayathri Venkatesan

கலப்பு திருமணம் செய்தவர்களுக்கு முன்னுரிமை வேண்டும்: முதலமைச்சருக்கு ரவிக்குமார் எம்.பி கடிதம்!

Ezhilarasan

”கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகள் என விளம்பரம் செய்யக்கூடாது”- ஆயுஷ் மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Jayapriya