திமுக நாடாளுமன்ற உறுபினர் கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மத்திய பாஜக அரசு UPI-யை எதிர்காலப் பணப் பரிவர்த்தனை முறையாக முன்னிறுத்தி, அதன் வளர்ச்சியைப் பெருமையுடன் கொண்டாடியது.
தற்போது, UPI-யை மக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிய பிறகு, அரசு அதிலிருந்து வருவாய் ஈட்ட முற்படுகிறது. வணிகர்கள் கட்டணத்தைச் செலுத்தினாலும் அல்லது அச்செலவை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தினாலும், இறுதியில் அந்தச் சுமையைச் சுமக்கப்போவது பொதுமக்கள்தான்.
மத்திய பாஜக அரசு மக்களின் அன்றாட வாழ்க்கையை வருவாய் ஈட்டும் வழியாகக் கருதுவதை நிறுத்திவிட்டு, இந்த நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.




