மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: ருத்துராஜுக்கு அணியில் இடம்!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிர்டான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்படி முதல் ஒருநாள போட்டி வருகின்ற செப்.27-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையிலான மேற்கிந்திய தீவுகள் அணிக்கு அதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியும், டி20 தொடருக்கு ஷ்ரேயஸ் தலைமையிலான இந்திய அணியிம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,

இந்திய ஒருநாள் (ODI) அணி: ஷுப்மன் கில் (c), ரோஹித் சர்மா, விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், கே.எல். ராகுல் (vc), துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், முகமது சிராஜ், ஆகிப் நபி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், நமன் தீர்.

இந்திய டி20 (T20I) அணி: ஷ்ரேயாஸ் ஐயர் (c), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன்(wk), சஞ்சு சாம்சன் (wk), திலக் வர்மா (vc), சிவம் துபே, குல்தீப் யாதவ், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ்.

இந்த தொடரில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடம் கிடைத்துள்ளது. சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.