“அமுல்” குட்டிப் பொண்ணை வரைந்த விளம்பர உலகின் ஜாம்பவான் சில்வெஸ்டர் டகுன்ஹா காலமானார்.
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. முன்னணி பால்பொருள்கள் விற்பனை நிறுவனமான அமுல் பால் பொருட்கள் நாடு முழுவதும் அனைத்து கடைகளிலும் கிடைக்கிறது.
1980 மற்றும் 90களில் வந்த அமுல் விளம்பரத்தை பார்த்து ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக அந்த விளம்பரங்களில் வரக்கூடிய கார்ட்டூன் சிறுமி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது. அந்த கார்ட்டூன் சிறுமி வரும் விளம்பரத்தை பார்க்காதவர்களே இருக்க முடியாது.
கார்ட்டூன் சிறுமி விளம்பரத்தை உருவாக்கியவரும், இந்திய விளம்பர உலகின் முன்னோடியுமான சில்வெஸ்டர் டகுன்ஹா 80-வது வயதில் காலமானார். இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு பல விளம்பரங்களை வடிவமைத்துள்ளார். ஆனால், அமுல் நிறுவனத்திற்கு அவர் உருவாக்கிய அமுல் கேர்ள் விளம்பரம் தான் அவருக்கு உண்மையான அங்கீகாத்தை பெற்று தந்தது.







