1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வு – தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 5 ம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குநகரம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில்,

“தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது”.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.