ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆடர் செய்தவருக்கு ஆணுறையை ஸ்விகி டெலிவரி செய்துள்ளது.
பெரியசாமி என்பவர் ஸ்விகியில், தன்னுடைய குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆடர் செய்துள்ளார். அப்பா ஐஸ்கிரீம் ஆடர் செய்துள்ளார். வந்ததும் சாப்பிடலாம் என குழந்தைகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளனர். அதன்படி, ஆடரை ஸ்விகி டெலிவரி பர்சன் கொண்டுவந்து கொடுத்துள்ளார். அதனைப் பெற்ற பெரியசாமி குழந்தைகளுக்குக் கொடுக்க ஆர்வத்துடன் பிரித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அவர் பொட்டலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ்-க்கு மாற்றாக ஆணுறை இருந்துள்ளது. இதனைப் பார்த்த அவர் கோபத்துடன் ட்வீட்டரில் ஸ்விகியை டேக் செய்து நான் என்ன ஆடர் செய்தேன் நீங்கள் என்ன அனுப்பியுள்ளீர்கள் என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைச் செய்தி: ‘பேஸ்புக் பாஸ்வேர்டு மறந்துடுச்சா? இதை மட்டும் செய்யுங்க, கவலையை விடுங்க!’
பெரியசாமியின் பதிவைப் பார்த்த ஸ்விகி, நீங்கள் ஒரு தவறான ஆடரைப் பெற்றுள்ளீர்கள். அதை அறிந்து வருந்துகிறேன். தங்களின் ஆடர் ஐடியைப் பகிரவும் நாங்கள் உதவுகிறோம் எனப் பதிலளித்துள்ளது. இந்த பதிவைப் பார்த்த சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் பலரும் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
https://twitter.com/SwiggyCares/status/1563580355818299393









