கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் மறந்த பாஸ்வேர்டை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. பேஸ்புக், ஜிமெயில், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என பல்வேறு சமூக ஊடகங்களில் பலரும் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், எல்லா பாஸ்வேர்டையும் நினைவில் வைக்க முடியாமல் பலரும் மறந்துவிடுகின்றனர். பொதுவாகக் கணக்கை மீட்டெடுக்க பர்கெட் பாஸ்வேர்டு வசதியைப் பயன்படுத்தி பாஸ்வேர்டை மாற்றி அமைத்து மீண்டும் அந்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோம். ஆனால், கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் எளிதாக பாஸ்வேர்டை கண்டுபிடிக்கலாம்.
கூகுள் குரோமில் உள்ள ஆட்டோ பிள் வசதி, நாம் லாகின் விவரங்களைச் சேமித்து வைத்துக் கொள்ளும். அதன்படி, முதல்முறை லாகின் செய்கையில், பாஸ்வேர்டு செவ் செய்துகொள்ளலாம் என்கிற நோட்டிபிகேஷன் திரையில் தோன்றும். அப்போது நீங்கள் ஓகே செய்தால், செய்து வைத்திருந்தால் கூகுள் குரோம் மூலமாக சில வினாடியில் எளிதாக பாஸ்வேர்டை கண்டுபிடிக்கலாம். நீங்கள் கூகுள் குரோமில் பாஸ்வேர்டு செவ் செய்யாவிட்டால், பார்வேர்டு மீட்டெடுக்க பர்கெட் பாஸ்வேர்டு வசதியைத் தான் நாட வேண்டி இருக்கும்.
அண்மைச் செய்திகள்: ‘காங்கிரஸ் தலைவர் தேர்தல்; அக்டோபர் 17ம் தேதி நடைபெறும் எனத் தகவல்’
- குரோம் பிரவுசரை ஓபன் செய்ய வேண்டும்.
- டாப்பில் வலதுபுறத்தில் உள்ள செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- இடதுபுறம் ஓரத்தில் உள்ள ஆட்டோ பிள் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- முதலில் இருக்கும் பாஸ்வேர்டு ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- கூகுள் குரோமில் ஸ்டோர் ஆகியிருக்கும் கணக்குகளின் பாஸ்வேர்ட் மறைக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
- உங்களுக்குத் தெரிய வேண்டிய கணக்கின் பாஸ்வேர்டை காண, பாஸ்வேர்டு
- விசிபிளிட்டி ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
- அருகிலிருக்கும் மூன்று புள்ளி மெனுவை கிளிக் செய்து, ஐடி மற்றும் பாஸ்வேர்டை காப்பி செய்துகொள்ளலாம்.








