முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது அதிமுக சார்பில் சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அம்பத்தூரில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் திமுக கழக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அப்போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாகவும், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் சேலம் காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஏற்கனவே திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி நீதிபதிகள் நியமனத்தில் தலித் சமுதாயத்தினர் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது.







