முக்கியச் செய்திகள் இந்தியா

பணமோசடி வழக்கில் கைதான ICICI வங்கியின் முன்னாள் CEOக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

பணமோசடி வழக்கில் கைதான ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் நிர்வாக அதிகாரி சந்தா கோச்சருக்கு மும்பை நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி சம்பந்தமாக 2019 பிப்ரவரியில் அமலாக்கத்துறை ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் செயல் நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர், மற்றும் வீடியோகான் குழுமத்தின் வேணுகோபல் தத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. முறைகேடாக வங்கியிலிருந்து ரூ.1,875 கோடி கடன் வழங்கப்பட்டது தொடர்பாக இந்த வழக்கு பதியப்பட்டிருந்தது.

அமலாக்கத்துறையின் புகாரினை தொடர்ந்து, மத்திய புலனாய்வு துறை விசாரணையை தொடங்கியது. இதன் அடிப்படையில் மூன்று நபர்கள் மீதும், மூன்று நிறுவனங்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் வேணுகோபால் தத் மீது CBI பல குற்றச்சாட்டுகளை அடுக்கியது. சந்தா கோச்சர் ஐசிஐசிஐ வங்கியின் செயல் நிர்வாக அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் வேணுகோபால் தத்தின் முறைகேடாக கடன் வழங்கப்பட்டதாக CBI குற்றம்சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்: கோல்ஃப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை

Gayathri Venkatesan

ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Jayapriya

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Saravana Kumar

Leave a Reply