எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து திருச்செங்கோட்டில் பட்டாசு வெடித்து இனிப்பு கொடுத்து தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்தது. இதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நகர அவைத் தலைவர் பொன்னுசாமி தலைமையில் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
—-ம. ஶ்ரீ மரகதம்







