குலசாமி திரைப்படம் மே 5 முதல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
MIK Productions தயாரிப்பில், நாயகன் மற்றும் பில்லா பாண்டி படங்களை இயக்கிய குட்டிப்புலி சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் நடிக்கும் படத்திற்கு விஜய்சேதுபதி வசனம் எழுதியுள்ள திரைப்படம் தான் ‘குலசாமி’.
வைட் ஆங்கில் ரவிசங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனி ஒருவன் எடிட்டர் கோபி கிருஷ்ணா எடிட்டராகவும்,ஜீ தமிழ் ராக் ஸ்டார் பின்னணி பாடகர் மஹாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்கள். மேலும், இப்படத்திற்கு கனல் கண்ணன் சண்டை பயிற்சி அமைத்துள்ளார். ஆக்ஷ்ன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம் இன்று (ஏப்ரல் 21) திரைக்கு வர இருந்தது.
ஆனால் சில காரணங்களால் இந்த படத்தை இன்று வெளியிட முடியவில்லை. அதனால் மே 5 ஆம் தேதி உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் காணும் வகையில் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. என்பதை தெரிவித்து.







