தமிழ்நாட்டில் கால் பதிக்கும் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனம்!

புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ்,  தமிழ்நாட்டில் தனது திறன் மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8…

புகழ்பெற்ற காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ்,  தமிழ்நாட்டில் தனது திறன் மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க உள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.  இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.  மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.  இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் உலக தடகள ஆடைகள் மற்றும் காலணி தயாரிப்பு நிறுவனமான அடிடாஸ் தனது முதல் இந்திய உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது.  சீனாவுக்கு வெளியே ஆசியாவிலேயே முதல் மையம் இதுவாகும். இந்த மையம் இனி உலகம் முழுக்க அடிடாஸ் காலணிகளை ஏற்றுமதி செய்யும்.

அடிடாஸ் நிறுவனம் தனது Global capacity center ஐ சென்னையில் அமைக்க திட்டமிட்டுள்ளது. போர்ச்சுகல்,  சீனா உள்ளிட்ட நாடுகளில் உள்ள மையங்களுடன் இணைந்து இந்த மையம் செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது.

அடிடாஸ் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் வர்த்தகத்தை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.  காலணி மற்றும் ஆடை உற்பத்திக்கு தேவையான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக (R&D) இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.