நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள் விசாரிக்க கோரியும் விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்தச் சூழலில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3ம் நாள் அமர்வு நேற்று கூடியது. அப்போது குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்க இருந்தது. ஆனால் அவை தொடங்கியது முதலே அதானி குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேபோல் இன்று நாடாளுமன்றம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்துக்கு எதிராக கூறப்பட்ட புகார்களை விசாரிப்பதற்கு நாடாளுமன்ற குழு அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இதனால் அமளி ஏற்பட்டது.
இதனையொட்டி மக்களவை 2 மணி வரையிலும் மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து அதானி விவகாரத்தில் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.