மீண்டும் சரிவை சந்தித்த அதானி குழும பங்குகள்..

அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஏற்றத்தை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால்,…

அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஏற்றத்தை சந்தித்த நிலையில் இன்று மீண்டும் சரிவடைந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மீது அண்மையில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தது. அதனால், அந்த குழுமத்தின் மதிப்பு இரண்டே நாட்களில் 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்தது.

மேலும் ஹிண்டர்பர்க்கின் குற்றச்சாட்டு தொடர்பாக அதானி குழுமம் 413 பக்க அறிக்கை வெளியிட்டு பதில் அளித்திருந்தது. இந்த குற்றச்சாட்டானது இந்தியா மீதான குற்றச்சாட்டு என்று அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற பங்குசந்தை வர்த்தகத்தின் போது அதானி குழும பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன. இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே அதானி குழுமத்தின் பங்குகள் சரிவை சந்தித்தது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை இன்று (பிப்ரவரி 9ம் தேதி) 11 சதவீதம் அதாவது ரூ.238 குறைந்து ரூ.1925-ஆக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இதேபோல் அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.17 குறைந்து ரூ.581 ஆக வர்த்தகமாகியது. அதானி பவர் நிறுவனத்தின் பங்கு ரூ.9 குறைந்து ரூ.172-ஆக வர்த்தகமாகியது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.65 குறைந்து ரூ.1249ஆகவும்,  அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.40 சரிந்து ரூ.762ஆகவும், டோட்டல் கேஸ் பங்கு ரூ.69 சரிந்து ரூ.1324ஆகவும் வர்த்தகமாகியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.