“மோடி, ட்ரம்புக்கு முன்னால் மண்டியிட முடிவு செய்துள்ளார்” – யூபிஐ விவகாரத்தில் ராகுல்காந்தி சாடல்!

யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி , அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு முன் மண்டியிட முடிவு செய்துள்ளதாகவும், அரசு அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்கி வருவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார் . மேலும், சில யுபிஐ பரிவர்த்தனைகள் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராஅகுல் காந்தி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, “வணிகர்களுக்கு ரூ. 2,000-க்கு மேல் செய்யப்படும் யுபிஐ பரிமாற்றங்களுக்கு 0.4 சதவீதக் கட்டணம் விதிக்கப்படும் என அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்திருந்தது. இந்தப் புதிய கட்டணம் அக்டோபர் 15 முதல் அமலுக்கு வரும். தனிநபர்களுக்கிடையேயான பரிவர்த்தனைகள் மற்றும் சிறிய மதிப்புள்ள கொடுப்பனவுகளுக்கு இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகுல், இந்திரா காந்தியிடம் ஒருமுறை, நீங்கள் இடதுபுறம் சாய்கிறீர்களா அல்லது வலதுபுறம் சாய்கிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, ‘நான் இடதுபுறம் சாய்வதில்லை, வலதுபுறம் சாய்வதில்லை, நான் நேராக நிற்கிறேன்’ என்பதே அவரது பதிலாக இருந்தது. மோடியின் கருத்து முற்றிலும் வேறுபட்டது; அவர் இடதுசாரியும் அல்ல, வலதுசாரியும் அல்ல. அவர் நேராகப் படுத்து, டொனால்ட் டிரம்புக்கு முன்னால் மண்டியிட முடிவு செய்துள்ளார்.

அவர் யூபிஐ-க்கு வரி விதிப்பதன் மூலமும், அமெரிக்காவிற்கு பெரும் தொகையை வழங்குவதன் மூலமும் ஒவ்வொரு இந்தியர் மீதும் வரி விதித்துள்ளார். மோடி ஜி, யுபிஐ வரியை இப்போதே திரும்பப் பெறுங்கள்.” இன்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.