ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை விவகாரத்தால் அதானி குழுமத்தின் பங்குகள் மிகப் பெரிய அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன. அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20% சதவீதம் வரை இன்று சரிவை கண்டுள்ளது.
உலகின் முன்னணி நிறுவனமான அதானி குழுமம் பல ஆண்டுகளக நிதி முறைக்கேட்டில் ஈடுபட்டு வருகிறது என்றும் அக்குழுமத்துக்கு அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த அறிக்கையில் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு பங்கு விலைகளை மிக அதிக அளவுக்கு விலை ஏற்றி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பங்கு உயர்வை காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும், வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை அதானி குடும்ப உறுப்பினர்கள் தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெளியானதையடுத்து அதானி குழும பங்குகள் சரிவை சந்திக்க தொடங்கின. கடந்த புதன்கிழமை வர்த்தகத்தில் அதானி குழும பங்குகள் சரிந்ததன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. மேலும் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு 97,000 கோடி ரூபாய் வரை சரிவை கண்டது.
இன்றைய வர்த்தகத்தில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது. குறிப்பாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு 20% வரை சரிந்தது. அதான் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பங்கு 19% வரையிலும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு 20% வரையில் சரிவை கண்டது. அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 15 சதவீதம் வரை சரிவை கண்டுள்ளது.