திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகளை நிறைவு – வீடியோ வெளியிட்ட நடிகை ஸ்ருதி ஹாசன்

லக் என்ற ஹிந்தி படம் மூலம் 2009ம் ஆண்டில் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் மகள். தமிழில் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் 2011 ஆம்…

லக் என்ற ஹிந்தி படம் மூலம் 2009ம் ஆண்டில் திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன்.

நடிகர் கமல் ஹாசனின் மகள். தமிழில் ஏழாம் அறிவு படத்தில் அறிமுகமானார். இந்தப் படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது. தனுஷுடன் 3, ஹிந்தியில் டி-டே, நடிகர் விஜய் உடன் புலி, நடிகர் அஜித்துடன் வேதாளம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார் ஸ்ருதி ஹாசன். தெலுங்கிலும் அதிக எண்ணிக்கையிலான படங்களை நடித்துள்ளார்.

நடிகை என்பதுடன் இவர் சிறந்த பாடகியுமாவார். இவர் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையொட்டி, வீடியோ ஒன்றை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அத்துடன், பதிவொன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மாயாஜாலமான 13 வருடங்கள். நான் ஒரு திரைப்படத்தைத் தாண்டி அதிகம் நடிப்பேன் என்று நினைக்கவில்லை. நான் நடிப்பதற்காக பிறக்கவில்லை. நான் சினிமாவை நேசிக்க கற்றுக்கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. சினிமாவால் எனக்கு கிடைத்த வாழ்க்கைக்கு நான் மிகவும் நன்றியுள்ளவராக இருப்பேன்.

பல வருடங்களாக வெற்றி தோல்விகளை எப்படி சமாளிப்பது, நம்பிக்கையுடனும் எப்படி செயல்படுவது என்று நிறைய கற்றுக்கொண்டேன். எனக்குக் கிடைத்த அன்புக்கும் பாராட்டுக்களுக்கும் நான் நன்றியுள்ளவராக இருப்பேன். அதை நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். எல்லாவற்றிற்கும் நன்றி என்று ஸ்ருதிஹாசன் பேசியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.