திடீர் உடல் நலக்குறைவு: பிரபல நடிகை மருத்துவமனையில் அனுமதி

நடிகை சஞ்சனா கல்ராணி, உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இதில் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர்…

நடிகை சஞ்சனா கல்ராணி, உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி மற்றும் ராகிணி திவேதி. இதில் சஞ்சனா, நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி. இவர் தமிழில் ரவிபார்கவன் இயக்கிய ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ளார். ராகிணி, சமுத்திரக்கனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்தில் நடித்திருந்தார்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும், போதைப்பொருட்கள் விற்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இதற்கிடையில், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக, அவர்களது தலைமுடி, தடய அறிவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பரிசோத னையில் அவர்கள் போதைப்பொருள் பயன்படுத்தி இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்தது. இது போதைப்பொருள் வழக்கில் நடிகைகள் 2 பேருக்கும் நெருக்கடியை ஏற் படுத்தி உள்ளது.

இந்த நிலையில், நடிகை சஞ்சனா பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று திடீரென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவரது தாய் ரேஷ்மா கூறும்போது, உடல் நலக்குறைவு காரணமாக சஞ்சனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எந்த தவறும் செய்யவில்லை. பழைய விஷயங்களை நினைத்து பார்க்க விரும்பவில்லை என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.