3 வது டெஸ்ட்: சரிந்தது இந்திய அணி, நிமிரும் இங்கிலாந்து

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

இந்திய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட
டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள
ஹெட்டிங்லே மைதானத்தில் நேற்று (25ம் தேதி) தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரில் இருந்தே தடுமாறத் தொடங்கிய இந்திய அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனால், இந்திய அணி 78 ரன்களில் அனைத்து விகெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 19 ரன்களும், ரஹானே 18 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய ஆண்டர்சன் மற்றும் ஓவர்டன் தலா 3 விகெட்டுகளும், சாம் கரன், ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹசீப் ஹமீத், ரோரி பர்ன்ஸ் தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 120 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஹசீப் ஹமீத் 60 ரன்களுடனும் பர்ன்ஸ் 52 ரன்களுடன் களத்தில் உள்ளனர். 2 வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.