நிலவின் தரையில் இறங்கி நகர்ந்து வரும் பிரக்யான் ரோவர் தனது கேமரா மூலம் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக இஸ்ரோ கடந்த 2019ஆம் ஆண்டு சந்திரயான் – 2 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. பல்வேறு கட்ட பயணங்களுக்கு பின்னர் சந்திரயான் – 2 விண்கலம் கடந்த 2019ஆம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்திருந்தலும் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்காததால் நிலவில் மோதி செயல் இழந்தது. இருப்பினும் விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர் மட்டும் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 615 கோடி மதிப்பீடில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்த நிலையில் கடந்த ஜூலை 14ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி அளவில் விண்ணில் ஏவியது. சந்திரயான் -3 விண்கலம் நிலவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் கடந்த 14ஆம் தேதி அன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும் சந்திரயான் விண்கலத்தின் உயரம் குறைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
குறைந்தபட்சம் 151 கி.மீ தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ என்ற சுற்றுப்பாதையிலும் சந்திரயான் -3 விண்கலம் சுற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று சந்திரயான் -3 இல் உள்ள உந்துவிசைத் தொகுதியில் இருந்து ‘விக்ரம் லேண்டரை’ வெற்றிகரமாக தனியாக பிரித்தனர். பின்னர்,கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது.
https://twitter.com/isro/status/1696791144154513550?t=HzBdhNVM5Pwj4l2-L1tPSw&s=09
இந்நிலையில், அதிநவீன கேமரா எடுத்த புகைப்படத்தை முதன்முறையாக இஸ்ரோ வெளியிட்டுள்ளது. பிரன்யான் ரோவர் விக்ரம் லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.







