முக்கியச் செய்திகள் குற்றம் சினிமா

நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு; பணியாளர் மீது புகார்

நடிகை பார்வதி நாயர் வீட்டில் பல லட்சம் ரூபா மதிப்புள்ள 2 வாட்சுகள், செல்போன், லேப்டாப்புகள் திருட்டு. வீட்டு பணியாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

என்னை அறிந்தால், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் பார்வதி நாயர். மலையாள நடிகையான இவர் தமிழிலும் பல்வேறு படங்களில் நடித்து வருவதால் சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் சொந்தமாக வீடு வாங்கி சென்னைக்கு வரும்போது தங்கி செல்வது வழக்கம். இவர் வீட்டில் இல்லாதபோது வீட்டை பராமரிக்க வேலைக்காரர் ஒருவரை நியமித்திருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக இவர் வீட்டை பராமரித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதற்கிடையே புதிதாக தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதால் சில நாட்களுக்கு முன்பு பார்வதி நாயர் சென்னையிலுள்ள வீட்டிற்கு வந்துள்ளார்.வீட்டின் படுக்கை அறையில் வைத்திருந்த பீரோவிலிருந்த பல லட்சம் மதிப்புள்ள 2 வெளிநாட்டு வாட்சுகள் மற்றும் செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை காணாமல் திடுக்கிட்டார். வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த வேலைக்காரரும் வேலைக்கு வரவில்லை.

எனவே வீட்டில் வேலை செய்து வந்தவர்தான் இந்த வாட்சுகள், லேப்டாப், செல்போன்களை திருடி இருக்கவேண்டும் என நுங்கம்பாக்கம் போலீசில் நடிகை பார்வதி நாயர் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான வீட்டு பணியாளரை தேடிவருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் – முதல்வர் பழனிசாமி

Gayathri Venkatesan

17 வயது சிறுமியை திருமணம் செய்த காவலர் கைது!

Jeba Arul Robinson

’கொரோனா மாதா’திடீர் அகற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை!

Gayathri Venkatesan