நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை – படத்தின் மையக்கதை என்ன தெரியுமா?

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.  இந்த படத்திற்கு ‘கண்ணிவெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடிப்பதில்…

ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.  இந்த படத்திற்கு ‘கண்ணிவெடி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில், ரகுதாதா மற்றும் ரிவால்வர் ரீட்டா என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைப்படங்களை தயாரித்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

 ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபத்திரத்தில் நடிக்கும் புதிய படத்துக்கு ‘கண்ணிவெடி’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை நிகித கிருஷ்ணமூர்த்தி, நிகழ்ச்சி தொகுப்பாளர் ரக்‌ஷன் நடிக்கவுள்ளனர்.

அறிமுக இயக்குநர் கணேஷ் ராஜ் இந்த படத்தை இயக்குகிறார். பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்ட இப்படம் தொழில்நுட்பம் சார்ந்து சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இப்படம் பூஜையுடன் நேற்று  தொடங்கியுள்ளது. படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது:

“கண்ணிவெடி திரைப்படம் பரபரப்பான கதை சொல்லல் பாணியில் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் வித்தியாசமான படமாகவும் இருக்கும்” என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்மையில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பர்ஹானா’ வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.