விமரிசையாக நடைபெற்ற உத்திரியமாதா தேர்பவனி; ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு வழிபாடு…

வேளாங்கண்ணியில் விமரிசையாக நடைபெற்ற உத்திரியமாதா தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மும்பை, வசாய் பகுதி கொங்கினி மீனவர்களால் கொண்டாடப்படும்…

வேளாங்கண்ணியில் விமரிசையாக நடைபெற்ற உத்திரியமாதா தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு மாதாவை வழிபட்டனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மும்பை, வசாய் பகுதி கொங்கினி மீனவர்களால் கொண்டாடப்படும் உத்திரிய மாதா ஆண்டுப்பெருவிழா, கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. பேராலயத்திலிருந்து எழுந்தருளிய புனித உத்திரிய மாதா தேர் பவனியை பங்குத்தந்தை அற்புதராஜ் துவக்கி வைத்தார். மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி செபஸ்தியர், அந்தோணியர் சொரூபம் தாங்கிய சப்பரத்தை சுமந்து வந்தனர்.

தொடர்ந்து முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தேர்பவனியில் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் உற்சாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.