கார் ஓடையில் கவிழ்ந்து இளம் நடிகை காதலருடன் பலி

கார் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் நடிகை அவர் காதலருடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மராத்தி நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் அங்கு சில படங்களில் ஹீரோயி னாக நடித்துள்ளார். இவர்…

கார் ஓடையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளம் நடிகை அவர் காதலருடன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மராத்தி நடிகை ஐஸ்வரி தேஷ்பாண்டே. இவர் அங்கு சில படங்களில் ஹீரோயி னாக நடித்துள்ளார். இவர் சுபம் தட்கே ( Shubham Dadge) என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இவர்களுடைய திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடைபெற இருந்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து கார் மூலம் கோவா சென்றனர். அங்கு ஜாலியாக சுற்றிவிட்டு நேற்று முன் தினம் மும்பை திரும்பி கொண் டிருந்தனர். கோவா பர்தேஸ் தாலுகாவில் உள்ள ஹட்ஃபேட் கிராமத்தின் அருகே வந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து நிலைதடுமாறி அருகில் இருந்த ஓடைக்குள் கவிழ்ந்தது. சென்ட்ரல் லாக் காரணமாக காரின் கதவை திறக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து பற்றி அறிந்த தீயணைப்புத்துறையினர் நடிகை மற்றும் அவர் காதலர் உடலை மீட்டனர். நடிகையின் இந்த மரணம் மராத்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து திரைபிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்,

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.