நடிகை திவ்யங்கா திரிபாதிக்கு மீண்டும் அறுவை சிகிச்சை – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்திய தொலைக்காட்சி நடிகை இம்மாத தொடக்கத்தில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில்,  தற்போது மீண்டும் உயரத்திலிருந்து விழுந்து எலும்புகள் உடைந்துள்ளது. புகழ் பெற்ற இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி.  இவர் பல…

இந்திய தொலைக்காட்சி நடிகை இம்மாத தொடக்கத்தில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில்,  தற்போது மீண்டும் உயரத்திலிருந்து விழுந்து எலும்புகள் உடைந்துள்ளது.

புகழ் பெற்ற இந்திய தொலைக்காட்சி நடிகை திவ்யங்கா திரிபாதி.  இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.  பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்றுள்ளார்.  இம்மாத தொடக்கத்தில் தசைநார் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.  அவரின் இந்த உடல்நிலைக் குறைவு அவரின் ரசிகர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.  இந்நிலையில் தற்போது மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் தெரிவித்துள்ளதாவது;

திவ்யங்கா மெதுவாக குணமடைந்து வருகிறாள். இந்நிலையில் அவள் மீண்டும் உயரத்திலிருந்து விழுந்து விட்டாள். இதனால் அவளது முன்கை எலும்புகள் உடைந்துள்ளன. நாங்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எங்கள்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், எங்களுக்கான உங்கள் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. அவள் மீண்டு வருவதற்கான அனைத்து அன்பையும் நாங்கள் வழங்குவோம். என்றும் அன்புடன் விடி” என குறிப்பிட்டுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.