முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை ‘நல்லெண்ணெய்’ சித்ரா மாரடைப்பு காரணமாக நேற்று இரவு மரணம டைந்தார். அவருக்கு வயது 56.

நடிகை சித்ரா, கே.பாலசந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பிறகு, ’அவள் அப்படித்தான்’ படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ’ஆட்ட கலசம்’ படம் மூலம் ஹீரோயி னாக அறிமுகமானார். பிறகு ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், ’நல்லெண்ணெய்’ விளம்பரத் தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

கடந்த 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு ஸ்ருதி என்ற மகள் இருக்கிறார். திருமணமாகி சென்னையில் செட்டிலான சித்ரா, மகளை வளர்ப்பதற்காகவே சினிமாவில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்தார். அவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.

சித்ராவின் கணவர் சில மாதங்களுக்கு முன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவரை சித்ரா கவனித்து வந்த நிலையில் திடீரென மறைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சித்ரா மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை

Ezhilarasan

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம்!

Ezhilarasan

“மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வம் குறைந்துள்ளது”-ராதாகிருஷ்ணன்

Halley karthi