முக்கியச் செய்திகள் செய்திகள் சினிமா

திருமணம் என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன்: நடிகை சார்மி கறார்!

தனது திருமணம் குறித்து வெளியான செய்திகளை பிரபல நடிகை சார்மி மறுத்துள்ளார்.

தமிழ், காதல் அழிவதில்லை. காதல் கிசு கிசு, லாடம் உள்பட சில படங்களில் நடித்தவர் சார்மி. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், அங்கு இயக்குனர் புரி ஜெகநாத் துடன் இணைந்து படங்கள் தயாரித்து வருகிறார். இப்போது விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தை புரி ஜெகநாத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

கடந்த சில நாட்களாக, சார்மி திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெலுங்கு திரையுலகில் பரப்பாக செய்திகள் வெளியாகின.

அதை மறுத்துள்ள நடிகை சார்மி, தனது வேலையில் சிறப்பான காலகட்டத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை தனது வாழ்க்கையில் ஒருபோதும் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்துள் ளார். பொய்யாக எழுதுபவர்களுக்கும் வதந்திகளுக்கும் குட்பை, சுவாரசியமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்களாக இருக்கிறீர்கள் என்று குறிப் பிட்டுள்ளார்.

Advertisement:

Related posts

உயர்கல்வி மாணவர்களுக்கு இணையவழி கல்வி: யுஜிசி

ஹேர் ஸ்ப்ரேயால் வந்த வினை: இளம் பெண் தவிப்பு!

Jayapriya

“கர்ணன் வருவான், சீறும் கேள்விகளை ஏந்தி வருவான்” – நடிகர் தனுஷ்

Jeba Arul Robinson