உலகப்புகழ்பெற்ற திருச்செந்துார் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குடும்பத்துடன் வந்து சுவாமி தரிசனம் செய்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரபல சினிமா நடிகர், நடிகைகளும் வந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், அவரது தாய், சித்தி, தம்பி மணிகண்டன் ஆகியோருடன் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். பின்பு கோயில் மூலவர் அபிஷேகத்தில் கலந்து கொண்டு தீபாரணை பார்த்து சிறப்பு வழிபாடு செய்தனர்.
தரிசனம் முடிந்து கோயிலிருந்து வெளியே வந்த அவர்களை பார்த்ததும் ரசிகர்கள் சூழ்ந்து செல்ஃபி எடுத்தும், புகைப்படம் எடுத்தும் மகிழந்தனர். நடிகையும் சிரித்து மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைதொடர்ந்து குலசேகரன்பட்டினம், முத்தாரம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அனகா காளமேகன்







