36.1 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் சினிமா

நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டை முன்னிட்டு, திரைப்பட நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்டோர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தமது இல்லத்திற்கு வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு காத்திருந்த ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, அவரை பார்த்த பரவசத்தில் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆராவாரம் செய்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த ஆண்டு, கொரோனா பணி செய்து மீண்டு வந்த அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். பணியின் போது உயிரிழந்த அனைவருக்கும் அவரது குடும்பங்களுக்கும் தமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் அஞ்சலிகள் என்றும், இந்த ஆண்டு புது ஆண்டாக மட்டுமல்லாமல், ஒரு மாற்றத்திற்கு வித்திடும் ஆண்டாக இருக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இழப்புகளையும், நன்மையையும் கடந்த ஆண்டில் கடந்து வந்திருக்கும் நாம், புதிய ஆண்டில் இறைவனின் பெருங்கருணையை காணவிருப்பதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையுடன் 2021-ஆம் ஆண்டை நிறைவு செய்வதாகவும், 2022-ஆம் ஆண்டு இதே மகிழ்வுடன் தமக்கும், அனைவருக்கும் அமைய வேண்டிக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading