நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற்றதையடுத்து நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், உதயநிதிஸ்டாலின், இளவரசு, ஆரி, தன்யா ரவிச்சந்திரன், மயில்சாமி, தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வெற்றி விழாவில் உதயநிதி பேசியபோது, “தயாரிப்பாளர் இல்லாமல் நடக்கும் வெற்றி விழா இது. போனி கபூருக்கு நன்றி. அவரது அடுத்த தயாரிப்பு படமான வீட்ல விஷேசம் படத்திற்கும் வாழ்த்துகள். படத்தில் ஹீரோ நான்தான் ஆனால் எனக்கு அறிமுக காட்சி சாதாரணமாக இருந்தது. ஆனால் ஆரிக்கு மட்டும் சூப்பரான அறிமுக காட்சி.
திரையரங்கில் அவ்வளவு கைத்தட்டல் கிடைத்தது. நான் சொன்னதை வைத்து மாமன்னன் தான் உங்களுடைய கடைசி படமா என்று கேட்கிறார்கள். மாமன்னன் 50% படப்பிடிப்பு முடிந்துள்ளது. எனது நடிப்பில் 4 படங்கள் வெளிவர உள்ளது. நல்ல கதைகளை கேட்டு வருகிறேன். சமுதாய கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என ஆசை” என்றார்.
பின்னர், தனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம் வாங்குவதற்காக ரூ.45,000,66-க்கான காசோலையை சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் உதயநிதி வழங்கினார். இதுதொடர்பான பதிவையும் தனது சமூக வலைதளப் பக்கமான டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.
#NenjukuNeedhi திரைப்படத்தின் வெற்றி விழாவில், என் பெயரிலான அறக்கட்டளை வாயிலாக கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்யும் நவீன இயந்திரம் வாங்குவதற்காக ரூ.45,00,066-க்கான காசோலையை சென்னை குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் வழங்கினோம். @mynameisraahul @Arunrajakamaraj #Akash @babu2577 pic.twitter.com/RoxJAISNGT
— Udhay (@Udhaystalin) June 4, 2022
-மணிகண்டன்








