பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட யோகா தின நிகழ்ச்சியில், அதிக வெளிநாட்டினர் பங்கேற்ற நிகழ்ச்சி என்ற அடிப்படையில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் இன்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று முதல் 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
ஒரே நேரத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் யோகா செய்ததால் இந்த யோகா நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியால் யோகா உலகளவில் வலுவான முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது என்று கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் தெரிவித்துள்ளார்.







