கொரோனா நிவாரண நிதியுதவியாக 25 லட்சம் ரூபாயை நடிகர் விஜய் சேதுபதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உதவ அரசு பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், கொரோனா நிவாரண நிதியுதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில், திரைத்துறையினர் உட்பட பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று நடிகர் விஜய் சேதுபதி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து, கொரோனா நிவாரண தொகையாக 25 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார்.







