ரூ.5 கோடி கேட்டு நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு | சிங்கமுத்துவுக்கு #MadrasHighCourt அதிரடி உத்தரவு!

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்…

Actor Vadivelu sued for damages for Rs 5 crore - #HighCourt order giving time to Singamuthu!

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில். “பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில், என்னைப் பற்றி துளி கூட உண்மையில்லாத பல பொய்களைக் கூறி, தரக்குறைவாக பேசி உள்ளார். எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப் பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்கு தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் கே.ஜி.ரகுநாதன், என்.செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் நடிகர் சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

இந்த சூழலில், நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க அவகாசம் கோரியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் பதில் அளிக்க சிங்கமுத்துவுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.