தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்குத்தான் தனது முழு ஆதரவு என்று பிரபல வில்லன் நடிகர் சுமன் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து பிரபலமான வில்லன் நடிகர் சுமன், சினிமாத்துறைக்கு வந்து 43 ஆண்டுகள் நிறைவு பெற்றதையடுத்து, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாப்புமிக்க மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், அதிமுக தலைமையில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார். மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வரும்போது, மற்றொரு முதலமைச்சரை நாம் தேர்வு செய்ய வேண்டாம். அதேபோல ஜெயலலிதா கொண்டு வந்துள்ள திட்டங்கள் தென்னிந்தியாவில் வேறு எங்கும் செயல்படுத்தப்படவில்லை என்றார். எனவே வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்குத்தான் தனது முழு ஆதரவு என்றும், அதிமுகவில் இணைவது தொடர்பாக, தான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.







