‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்!

‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டிரெய்லரை  நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹிட் லிஸ்ட்’.  கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும்  இப்படத்தை சூர்ய கதிர்…

‘ஹிட் லிஸ்ட்’ படத்தின் டிரெய்லரை  நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘ஹிட் லிஸ்ட்’.  கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும்  இப்படத்தை சூர்ய கதிர் இயக்குகிறார்.  இத்திரைப்படத்தில் சரத்குமார், சித்தாரா, கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திர கனி, முனிஸ்காந்த், ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.  இந்த விழாவில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, பொன்ராம், மித்ரன் ஆர் ஜவஹர், கார்த்திக் சுப்பராஜ், சிறுத்தை சிவா, பேரரசு, கதிர், சரண், எழில்,  ராஜ குமாரன், சுப்ரமணியம் சிவா, வசந்த பாலன், மிஷ்கின், ஆர்.வி. உதயகுமார், பி. வாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.  இப்படக்குழுவினர் சமீபத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எகஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  படத்தின் டிரைலர் சைக்கோ திரில்லர் பாணியில் அமைந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.