2k கிட்ஸ்களையும் கவர்ந்த சிம்பு… 1கோடி Followersகளுடன் இன்ஸ்டாவில் முதலிடம்

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 10M followersகளை கொண்டு நடிகர் சிம்பு முதலிடம் பிடித்துள்ளார். தற்காலத்தில் ஸ்மார்ட் போனும், சமூகவலைதள பக்கங்களும் இல்லாமல் ஒரு மனிதர் வாழ்வது என்பது சற்று கடினமான…

தமிழ் சினிமா நட்சத்திரங்களில் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 10M followersகளை கொண்டு நடிகர் சிம்பு முதலிடம் பிடித்துள்ளார்.

தற்காலத்தில் ஸ்மார்ட் போனும், சமூகவலைதள பக்கங்களும் இல்லாமல் ஒரு மனிதர் வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்றே, ஆளுமைகள் தங்கள் கருத்து மற்றும் தகவல்களை தங்களது அதிகாரப் பக்கத்தில் பகிரும்போது அனைவருக்கும் செய்திகள் எளிதாக போய் சேர்கிறது.

நீண்ட நாட்களாக சமூக தளங்கள் பக்கங்களுக்குள் செல்லாமல் இருந்த நடிகர் சிம்பு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தார். ஆரம்பம் முதலே லட்சக்கணக்கான Followers களை கொண்ட அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

நடிகர்கள் பட்டியலில் அஜித், விஜய் தவிர்த்து பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திக் கொண்டுதான் உள்ளனர். நடிகர் ரஜினிகாந்திற்கு கணக்கு இருந்தாலும் அதில் அவர் ஆக்டிவாக இல்லை.

தற்போது 10M அதாவது 1கோடி Followersகளை கொண்டு தனக்கென தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்பதை நிரூபித்துள்ளார் நடிகர் சிம்பு. பெரும்பாலும் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துபவர்கள் 2k கிட்ஸ்கள் என்பது குறிப்பிடத்தக்கது

சிலம்பரசன்- 10M

ரஜினிகாந்த் -853K

கமல்ஹாசன்-2M

தனுஷ்- 4.8M

ஆர்யா
– 1M

ஜெயம் ரவி-
490K

சூர்யா-5.3M

கார்த்தி-2.3M

ஏ.ஆர்.ரகுமான்-6.8M

யுவன்சங்கர்ராஜா-1.6M

-மா.நிருபன் சக்கரவர்த்தி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.